கடலோரக்கவிதை 16-20

கடலோரக்கவிதை 16-20

அத்தியாயம்-16

இரவு தூங்குவதற்கு அதிக நேரமாகிவிட்டதால் நண்பகல் போல எழுந்து கீழிறங்கி வந்த தேவா பார்த்தது மரியதாஸ் தலையில் கட்டோடு அமர்ந்திருந்தார்.

பார்த்ததும் மனம் பதறியவன் அருகிலிருந்த அருளிடம் "என்னாச்சு சித்தப்பா,அப்பா தலையில என்னக் காயம்"

அதற்குள்ளாக தாஸ் தன் தம்பியிடம் கண்ஜாடை காட்டி சொல்லத என்று சொல்வதற்குள் அருள் கூறிவிட்டார்.

காலையில் துறைமுகத்திற்கு சென்றவர் ஏலம் எடுப்பதை கவனித்து மேற்பார்வை பார்த்துவிட்டு,எடுத்த மீன்களை வண்டியில் ஏற்றிவிட்டு நிற்கவும்.

ராபின் வந்தான் தன் அண்ணனோடு,இப்போது கொஞ்சம் அவர்களின் துள்ளல் அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் பண வரவு அதிகமாக இருக்கவும் திமிரும் ஆணவமும் கொஞ்சம் தலைக்குமேல் ஏற ஆரம்பித்தது.

அவர்களை விடப் பல மடங்கு சொத்துக்கு சொந்தக்காரர் மரியதாஸ்.ஆனால் அவரிடம் பணிவு மரியாதை எல்லாமே இருக்கும். அதனால் தான் இன்றளவும் அந்தத் துறைமுகத்தில் தலைவராக இருக்கிறார். அது பொறுக்காது அவருக்கு இடையூறு செய்யவே சகாயமும் அவனது கூட்டாளிகளும், தம்பி ராபின் உட்பட முயற்சி செய்கின்றனர்.

இப்போது வந்திருக்கும் டி.சி வேறு சகாயத்தின் மனைவியின் சொந்தக்காரன். அதை வைத்துதான் கொஞ்சம் ஆட்டம் காட்டுகின்றனர்.

"லே மைக்கேலு உங்க தலைவரு மவன எங்கலே,எங்க தேவா தம்பி தங்க கம்பினு சொல்லிட்டு திரிவியலே,அந்த தொங்க கம்பி பார் பாரா அலையுறான். பிள்ளைய் ஒழங்கா வளர்க்கத் தெரியலை, இவனுங்க தலைவர் பதவியில் இருக்கனுங்க, ஏதோ நாங்கதான் அடிதடி பண்ணிட்டு இருக்கிற மாதிரி பெருசா பேசினார். இப்போ தலைவர் பையனும் அப்படித்தான இருக்கான் இப்ப முகத்தை எங்க கொண்டு வைப்பாராம்.

உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் போல, தான் வீட்டுக்கெல்லாம் இல்லை போல என்று சண்டைக்கென்றே வம்பிழுக்க.

மைக்கேலும் அருளும் ராபினின் சட்டைய பிடித்திழுத்து அடிக்க போனார்கள்"எங்கவந்து என்னல பேசற,செவுல பிச்சிருவோம்ல" என்று.

அதற்குள் மரியதாஸ் "லே அருளு அவனைவிடு சண்டை போடாத அவன் என்னமும் பேசிட்டுப்போறான்" என்று சத்தம் போடவும்...அருள் ராபினை விட...அதற்குள் மரியதாஸின் ஆட்கள் ராபினை சுற்றி வளைத்தனர்...இனி தலைவர்கிட்ட எதாவது வம்பிழுத்தன நடக்குறதே வேற என்று எச்சரிக்கை செய்தனர். 

"என்னல எங்களையே எப்பவும் பேசவிடாம செய்றீங்க, இங்க அவரு வச்சதுதன் சட்டமோ,ஆண்பிள்ளைனா இலட்சணமா இருக்கணும் கட்டிட்டு வந்தவளை வச்சு வாழ தெரியாத பொட்டைப் பையல பெத்து வச்சுட்டு தலைவராம் தலைவரு.என்ன கொடுமை செய்தீங்களோ மூணே மாசத்துல ஓடிப்போயிட்டு அந்தப் பொண்ணு"

அவ்வளவுதான் அருள் "எங்க பிள்ளையவலே பொட்டப்பையனு சொல்ற அவன் கையால அடிவாங்கி ஓடிப்போன உங்கண்ணதான்ல பொட்டைப்பைய என்று அடிவெழுத்துவிட்டார்...ஆனல் ராபினோ அருளை சமாதானம் செய்றதுக்காக பிடிக்கப் போன மைக்கலையும் அடிச்சிட்டான்,மரியதாஸை தள்ளிவிட்டுட்டான்.அதில் கீழே விழுந்தவருக்கு கல்லில் மோதி நெற்றியில் அடி கைகளில் சிராய்ப்பு.

மொத்தத்தில் அங்கேயும் தேவாவின் விசயம்தான் பேசும் பொருளாகி விட்டது என்று வேதனைப் பட்டானவன்.

கோபத்தில் தன் ஒருகையால் கைக்காப்பினை மேலேற்றி விட்டு, கண்கள் சிவக்க வெளியே போக போனவனை மரியதாஸ் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தார். இதுவரை அப்பாவும் மகனுக்கும் நேரடியாக பேச்சு வார்த்தைகள் இருந்ததில்லை என்றாலும் ஒரு சுமுகமான உறவு இருந்தது.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மகனின் கையைப் பிடித்திருந்தார் மரியதாஸ்.நின்று தன் தகப்பனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க" ஒரு மகனா எனக்குனு இதுவரைக்கும் எதுவுமே செய்ததில்லை,முதன்முறையா உன்கிட்ட யாசகம் கேட்குறேன்.தயவு செய்து கொஞ்சநாள் எங்கயாவது வெளியூருக்கு வேலைக்குப் போ.இந்த குடியை விட்டுடு,பெத்தவனா உன்னை இப்படி பார்க்க பார்க்க மனசெல்லாம் வலிக்குது என்று நெஞ்சை பிடித்து அமர்ந்துவிட்டார்.

அதைப் பார்த்து பயந்து பதறி "ப்பா ப்பா என்று அவரை உலுக்கினான்,அருளும் அண்ணே என்று கதற,ஒன்னுமில்லைல ஒன்னுமில்லைல" என்று தன்னை நிதானமாக காட்டிக்கொண்டார்.

அதற்குள் ரெஜினாவும் ரீனாவும் பதறி ஓடி வந்து பார்த்துவிட்டு அவர் இருந்த நிலையப் பார்த்து அழவும்,மெல்ல அவர் தலைய சரியாரம்பித்ததும்,ஓடிப்போய் தன் தகப்பனை குழந்தையாக தூக்கியவன் வெளியே ஓட அதற்குள் மைக்கேலு ஓடிவந்து காரை ஓட்ட, எப்படி ஹாஸ்பிட்டல் கொண்டுவந்து சேர்த்தான் என்று தெரியாது...தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

ஒருமணி நேர காத்திருப்பிற்க்குப் பின் டாக்டர் வெளியே வந்து " மைல்டா ஹார்ட் அட்டாக்,பிரச்சனை ஒன்னுமில்லை,இனி கொஞ்சம் கவனமா இருக்கணும்" என்றதும்தான்.

ரெஜினா அவ்வளவுதான் ஐயோ என்று அருகிலிருந்த பெஞ்சில் கவிழ்ந்து அழ ஆரம்பித்தார்.யாரும் இதை எதிர் பார்க்கவில்லை

சாயங்காலம் போல மெல்ல கண்விழித்த மரியதாஸைப் பார்க்க ஆளாளுக்கு பார்க்க வந்தனர்.மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில்தான்.அவ்வளவு பெரிய துறைமுகத்தினை கைக்குள் வைத்திருப்பவர் இப்படி படுத்திருந்தால் யாருக்குத்தான் பொறுக்கும்.

கிட்டதட்ட ஒருவாரம் எல்லாருக்கும் மருத்துவமனை வாசம் தான். ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு மரியதாஸை அழைத்து வந்துவிட்டனர். அவரது தோற்றத்தில் பத்து வயது மூப்பு அதிகமாக தெரிந்தது. என்றுமே அவர் இப்படி ஓய்ந்து இருந்ததில்லை. தேவாவின் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் ஓய்ந்து அமர்ந்ததேயில்லை.

அவரை அப்படி பார்த்ததும் மனது கேட்கவில்லை...வசந்த் அவரை தினமும் பார்க்க வந்தான். தேவாவின் அக்காக்கள் தகப்பனின் நிலையறிந்து அங்கயேதான் இருந்து பார்த்துக்கொண்டனர்.பிள்ளைகள் சூழ இருக்கும்போது மரியதஸின் உடல்நிலை தேறிவந்தது.ரீனா பின் தகப்பனின் அருகிலயேதான் இருந்தாள்.

இப்படித்தான் ஒருநாள் வசந்த் வந்திருந்த நேரம் தேவாவை அழைத்தவர் "நேரடியாக தம்பி தயவு செய்து வசந்த் கூட நீ மும்பைக்கு போ.காப்பல் வேலைக்கு முயற்சி பண்ணு"

"ப்பா என்ன பேசுறீங்க,உங்களையெல்லாம் விட்டு எப்படி கப்பல் வேலைக்கு போவேன்.அதைவிட நீங்க இப்படி இருக்கும்போது"என வேதனையாக கேட்கவும்.

ரெஜினாவோ உன்னை நினைச்சு நினைச்சுத்தான் அப்பா வேதனைப் படுதாவ,நீ எங்க கண்ணுமுன்னாடியே இப்படியே குடிச்சு குடிச்சு அழிஞ்சு போயிட்வியோனு பயப்படுதாவ"

இப்போது தன் தகப்பனைப் பார்க்க அவரது முகம் இப்போதும் யோசனையிலேயே இருக்கவும் புரிந்துகொண்டான் தன்னால்தான் இவ்வளவு பிரச்சனையா தன்னை நினைத்தே எல்லாரும் கவலைப்படுகிறார்கள் இருந்து சிறிது யோசித்தவன்…

நான் வெளியே போய் வேலை பாக்குறதோ இல்லனா கப்பலுக்கு வேலைக்குப் போறதோ இதுதான் உங்களுக்கு சந்தோஷம்னா; நான் போறேன் என்று தன் சம்மதத்தை ம தெரிவித்தான்.

அவ்வளவுதான் அவன் தனது குடிப்பழக்கத்தை குறைத்தான்,காலையில் எழும்பி தன் தகப்பனுக்கு பதிலாக துறைமுக ஏலத்திற்கு சென்றான்.

பழைய தேவாவின் ஆளுமையும் கெத்தும் திரும்ப வந்திருந்தது.முன்பு கொஞ்சம் நஞ்சமிருந்த சிறுபிள்ளைதனங்கள் முற்றிலும் மறைந்து முழு ஆண்மகனாக தன்னுடைய காயங்கள் எல்லாவற்றையும் தன் மன ஆழத்தில் போட்டு அழுத்தி வைத்துக்கொண்டான்.

ஃபீனிக்ஸ் பறவையென சிலிர்த்து எழுந்துநின்றான்.அவன் அழிந்துப்போவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அவனை தலைநிமிர்த்தி பார்த்தனர்.

ஒரு மாதத்திற்குள் மரியதாஸ் நன்கு குணமாகி தன் தொழிலை பார்க்க கிளம்பிவிட்டார்,மருந்து பாதி சுகமாக்கியது என்றால்,மீதி தன் மகன் மீண்டு வந்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் குணமாகிவிட்டார்.

வசந்த் லீவு முடிந்து செல்லும்போது அவனுடன் தேவாவும் புறப்பட்டான்.வசந்த் ரீனாவிடம் ஏற்கனவே பேசிவிட்டான்.உனக்கா எப்போ என்னை கல்யாணம் செய்ய ஆசை வருதோ அதுவரைக்கும் நான் உனக்காக காத்திருக்கேன்,என்னைக்கா இருந்தாலும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.அது என்னைக்குனு நீயே முடிவு செய்யென்று முடிவை அவள் கையிலயே விட்டுவிட்டான்.

தேவாவோ புறப்படும்போது தன் தந்தயைபார்த்து "நான் என்னுபைய சுயமிழுந்து;அடுத்தவன்கிட்ட கைநீட்டி வேலைப் பார்க்கறதுதான் உங்க சந்தோஷம்னுதான் போறேன்.நீங்களா என்னை வரச்சொல்லி சொன்னாலும் இனி வரமாட்டேன்" என்றவன் தன் தகப்பனின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு,ம்மா பார்த்துக்கோம்மா போயிட்டு வர்றேன்.ரீனா குட்டி என்று அவளது தலையை பிடித்து ஆட்டினவன் கண்கள் கலங்க கிளம்பவும்.

சரியாக அந்த நேரம் மரியதாஸிற்கு போன் வந்தது .போலிஸ் ஸ்டேஷனில் இருந்து,தெரிந்த எஸ்.ஐ தான்,யாரோ தெரிந்த பெண் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து தூக்கிட்டுப்போய் 

ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க என்றும்; அந்த பெண் இவரின் உறவு என்று சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்கு.

அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்த இங்க உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல விசாரித்தாங்க என்றும் தகவல் வந்தது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவரின் முகம் மாறவும் என்ன என்று தேவா திரும்பிப்பார்த்து கேட்டதும் ஒன்னுமில்லை யாரையோ பத்தி விசாரிக்குறாங்க என்று மகனை வழியனுப்பியவர்.

அவன் சென்றதும் அருளை தன்னுடன் அழைத்துக்கொண்டு, மைக்கேலை காரை எடுக்க சொல்லி திருநெல்வேலி நோக்கி பயனப்பட்டார்.

இங்கு தூத்துகுடி ஏர்போட்டில் இருந்தவனின் கையில் இருந்த பர்ஸிலிருந்து எடுத்த பொருளைப் பார்த்த வசந்த என்னல இது தாலி...என்று அதிர்ந்து பார்க்க.

லேசாக வெறுப்பாக சிரித்தவன் நித்யா கழுத்துல நான் கட்டின தாலி கழட்டி எறிஞ்சுட்டா.அப்பவே என் கதால் செத்துப்போச்சுது.

இப்பவும் இதுல அவளோட வாசம் இருக்கறமாதிரியே இருக்கும், எப்படில அவளால என்னை ஈஸியா மறக்க முடிஞ்சது என பெருமூச்சை விட்டவன்...என் வாழ்க்கையில நான் சாகற வரைக்கும் அவளை பார்க்ககூடாது.அப்படிப் பார்த்தேன் என் கையாலதான் அவளுக்கு சாவு என்று கண்கள் சிவக்க வெறியோடு கூறினான்.

அத்தியாயம்-17.

தேவாவும் வசந்தும் மும்பை சென்றனர்,வசந்த் ஏற்கனவே சென்று வந்த ஏஜென்ஸி மூலமாகவே மெடிக்கல் முடிந்து உடனே வேலையில் சேர்ந்துவிட்டான்.

தேவாவிற்கு கிட்டதட்ட ஒரு மாதமாகியது,மும்பையிலேயே இருந்தான், அதில் தனிமையில் உளன்று தன்னைத்தானே செதுக்கிக் கொண்டேன்.

முக்கியமாக நித்யாவின் நினைவுகள்தான் அவன் நெஞ்சமெல்லாம் அவளை வெறுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவளை இன்னும் இன்னும் ஆழமாக நேசித்தான்.

பூவை கையினுள் எவ்வளவு பொத்தி வைத்தாலும் அதன் மணம் வெளியே பரவதான் செய்யும்,நம் கையிலிருந்து வாடி உதிர்ந்தாலும் நம் கையில் அதன் வாசத்தை விட்டுதான் செல்லும்...அப்படித்தான் காதலும் வருவது தெரியாது,ஆனால் நம் மனதில் தடம் பதித்து,சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொண்டு மனமெங்கும் பரவிக்கொண்டு அதன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

ஒருமாதம் கழித்து அவனுக்கு கப்பலுள் செல்ல எல்லாம் தயாராகி சென்றுவிட்டான்.

சுற்றிலும் கடல் கப்பல் உள்ளே நாலு சுவற்றுக்குள் வாழ்க்கை,நினைத்த நேரம் வரமுடியாது பிடித்தவர்களுடன் பேசுவதற்கு நேரம் பார்த்து பேச வேண்டும்.எந்தவித வெளி தொடர்பே இல்லாத சூழல்.

அதில் வேறு வசந்தும் தேவாவும் வேறு வேறு கப்பலில் வேலை செய்கின்றனர்.இணையவழி பேச்சுக்கள் அதுவும் ஏதாவது நாட்டில் கரைக்கு வரும்போது மட்டும்.

ஆழ்கடலை பார்க்கும்போதெல்லாம் நித்யாவுடன் முதன் முதலில் அவளுடன் கூடிய அந்தப்பொழுதுகள்தான் நியாபகத்திற்கு வந்து உடலின் அப்போதைய தேவையை உணர்த்தும்.

அவளுடன் வாழ்ந்த தருணத்தில் ஒரு நாள்கூட உன்கூட எனக்கு ஒத்துவராது அப்படிங்கற செய்கை அவளிடம் இருக்கவேயில்லை.

அவங்க வீட்டு சாப்பாட்டு முறையே வேறு,அவளது வேறு.தேவா குடும்பம் எப்படி அவளுக்காக மாற்றங்கள் செய்தார்களோ,அதே போல அவளும் அந்த வீட்டின் இயல்புகளை தன்னியல்பாக ஏற்றுக்கொண்டுதான் வாழ்ந்தாள்.

ஒரு நாள்கூட தேவாவிடம் முகம் சுழித்தோ,எனக்கு பிடிக்கவில்லை அப்படிங்கற உடல்மொழியோ அவளிடம் இருந்ததில்லை.

பழைய நினைவுகள் வந்து நெஞ்சில் அலைமோதியது,ஒரு நாள் தங்களது அறையில் விஸ்தாரமாக படுத்திருந்தாள் நித்யா,அவங்க அறைக்குள்ள ரீனாகூட நுழையமாட்டாள்.எதுக்காவது வந்தாலும் வெளியே கதவுகிட்ட நின்னு பேசிட்டு போயிடுவா…

அதனால் புடவை மேலேறி அரைகுறையாக படுத்திருந்தாளவள்,மெல்ல அறைக்குள் நுழைந்த தேவா ஹாய் மாமி செமையா படுத்திருக்க,பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு என்று கண்ணடித்தவன் அவளருகில் நெருங்கி வந்தமர்ந்து,அவளிடம் சில்மிஷம் செய்ய.

"கீழ சத்தமா இருந்துச்சு சின்னத்தை வந்திருக்காங்களா?என்று எழும்பியவளின் சேலை நழுவ,அவனது பார்வை சென்றயிடம் பார்த்து.தன் கரங்கொண்டு அவனது கண்களை மூடியவள் "மகனுக்கு எதாவது கொண்டு வந்திருப்பாங்களே,இன்னைக்கு என்ன ஸ்பெஷல்"

அதுவா மீன்வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்,மீன்ல என்ன செய்தாலும் முதல் பங்கு ஐயாவுக்குத்தான் என்று காலரை ஏற்றிவிட்டு சொல்லவும்…

அதுதான் தெரியுதே மீசையில என்னமோ ஒட்டியிருக்கு என்று அதை தன் புடவையின் முந்தானையால் துடைத்துவிடவும்,தேவாவின் சர்வமும் அவளிடம் சரணடைய, அப்படியே அவளது முகத்தை பிடித்து அவளது உதட்டை கடித்து இழுத்து முத்தம் என்னும் பெயரில் அவளது உதட்டில் ஆராய்ச்சி செய்து தன் நாக்கினை உள்செலுத்தி எச்சில் முத்தம் வைத்து விடுவித்தான்.

ஐயோ நீங்க சாப்டதோட காரம் நாக்குலயும் உதட்டுலயும் எரியுது என்று துடைத்தபின்தான்,தேவாவிற்கே புரிந்தது.

"சாரிடா லட்டு மறந்துட்டேன் சாரிம்மா மீன் சாப்பிட்டு அப்படியே மேல வந்துட்டேனா,உன்னை பார்த்ததுல எல்லாம் மறந்துட்டேன்...அருவருப்பா இருக்கா" 

"இல்லை,காரந்தான் வேற ஒன்னும் இல்லை"

தேவாவிற்குத்தான் அவளை கஷ்டப்படுத்துறமோ என்று ஃபிலீங்காக.அவனது மீசையைப் பிடித்திழுத்து விளையாடியவளின் கரத்தைப் பிடித்து தன் கைக்குள் வைத்தவன்.

இங்க சாப்பாடு விசயங்கள் உனக்கு ஒத்துப்போகுதா,இல்லைனா சொல்லு வேலைக்கரங்களை யாராவது ஏற்பாடு செய்து உனக்கு சமையல் செய்ய சொல்லுவோமா?அப்பா அன்னைக்கே கேட்டாவ,நான்தான் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்…

ஐய என்ன பேச்சு இது,நம்ம வீடு இதுல எனக்கு என்ன சாப்பாடு ஒத்துப்போகலைனு ஃபீல். உங்களை காதலிக்கும்போதே எல்லாம் தெரியதான செய்யும்,உங்களை பிடிக்கும்போது இதெல்லாம் பிடிக்காமலா போகும்,என்ன உடனே மாத்திக்க முடியாது கொஞ்ச நாளாகும் மாத்திக்கறதுக்கு அவ்வளவுதான் என்றவளின்…

அவளது நாடிப்பிடித்து லட்டுகுட்டி ரொம்ப ஸ்வீட்….உம்மாஆஆஆஆ என்று முத்தம் வைத்து லட்டுவை பிரிச்சுமேய்ஞ்சிடணும் போல இருக்கே என்று இழுக்க…

நித்யாவோ "ஐயோ நான் எஸ்கேப்" என்று கட்டிலைவிட்டு இறங்கி ஓடியவளை வழிமறித்தவன்…"எங்க ஓடுற" என்று அவளை எட்டிப்பிடிக்க, சேலை மொத்தமும் உருவி அவன் கையில் இருந்து.

மெல்ல தன் கைகள் கொண்டு அப்படியே தன் அங்கங்களை மறைத்து நின்றவளின் அருகில் வர மெதுவாக எட்டெடுத்து வைக்கவும்,அவளோ வேண்டாமென்று தலையை ஆட்டியவள் பின்னாக நகர்ந்து சென்றாள்.

லட்டு டெம்ட் பண்ணாத மச்சான்கிட்ட நீயா வந்த சேதாரம் கம்மி,முரண்டு பிடிச்சன்னா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை பார்த்துக்கோ என்க,நித்யாவோ கட்டிலின் அந்த பக்கம் போய் நின்றவள் தன் நாக்கை துருத்தி அவனுக்கு அழகு காட்ட.

பிடிங்க என்று கட்டிலின் மேலேறி ஒரு தாவலில் மனைவியை கோழி அமுக்குவதுபோல அமுக்கி பிடித்து, தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்து கட்டிலில் சரிந்தவனது,மார்பு சூட்டிலயே சுருண்டு தலைவைத்துப் படுத்து கொண்டாள்.

லட்டு எங்க வீடு உனக்குப் பிடிச்சிருக்கா?என் குடும்பத்தை பிடிச்சிருக்கா?உண்மையிலயே நீ சந்தோஷமா இருக்கியா? என்று கேட்டான்.

"என்ன பைத்தியம் மாதிரி கேள்வி கேட்குறீங்க"

"என்னது பைத்தியமா! ஏன்டி சொல்லமாட்ட நீ, பொண்டாட்டிய பத்தி உண்மையான அக்கறையில கேட்டா நீ பைத்தியங்கற" என அவளது கன்னத்தை கடித்து வைத்தான்.

ஐயோ வலிக்குது என்று கன்னத்தை தடவிக்கொண்டே "உங்களை காதலிச்சு நீங்கதான் எனக்கு எல்லாம் என வந்திருக்கேன்,அப்போ உங்ககூட சேர்ந்த உறவுகளையும் எனக்குப் பிடிக்கமாலா போகும்.அதுவும் இவ்வளவு பாசமா இருக்கற உறவு, எல்லாரும் தங்களது லிமிட்டை தாண்டாத சுதந்திரமா இருக்காங்க,அதுக்கே எனக்கு மாமாவையும் அத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு.

அப்புறம் சின்ன அத்தையும் அருள் மாமாவும் சோ க்யூட் பேர்ல அவங்க.

பெரிய அண்ணிகள் இரண்டு பேருமே தங்களோட தம்பியின் மனைவியா பார்க்கமல்,உங்களோட பாதியா பாக்குறாங்க அதனால் எந்த உரசலும் வர்றதில்லை,பின்ன ரீனா என்னோட க்ளோஸ் பிரண்ட் வேற என்ன வேணும்"

"அப்புறம் "என்று தேவா சரிந்து படுத்து கன்னத்தில் கைவத்து அவளிடம் கேட்க…

"அப்புறம் என்ன ஒன்னும் இல்லையே"என நித்யா சொல்லவும்.

அப்புறம் ஒன்னுமில்லையா ஒரு முக்கியமான ஆளைப் பத்தி சொல்லலையே அவர பத்திசொல்றது என்று ஆர்வமாக கேட்டான்.

யார சொல்லாமா விட்டோம் என்று அவள் யோசிக்க..

அடிப்பாவி வீட்ல உள்ள அத்தனை பேரையும் சொன்ன,உன் ஹீரோ என்னைய பத்தி ஒன்னுமே சொல்லலை...என்னைப் பத்தி சொல்லு என பிடிவாதம் பிடித்தான் தேவா.

மெல்ல அவனது மீசையை முறுக்கிவிட்டவள்,அவனது தலையை கலைத்து விட்டு நீங்கதான் நான்,நான்தான் நீங்க இதுல என்ன பிரிச்சு சொல்ல முடியும் என தலைசரித்து கேட்ட மனையாளை அவ்வளவு பிடித்தது தேவாவிற்கு.

மெல்ல அவளது மூக்கின் நுனியில் முத்தம் வைத்தவன் தேங்க்ஸ்டி லட்டு குட்டி என்றவன் மெல்ல மெல்ல அவளுள் புதைய ஆரம்பித்தான்.

அவளுக்கு ஆடையாக அவன் மாறியிருந்தான்,மனைவி எனும் தேவதையின் உடலிலயே குடியிருக்க அவளுடலில் புகுந்து கொண்டான்.

மென்மையாக ஆனால் அழுத்தமாக தன் காதலை அவளுக்குள் பதியம் போட்டான்.

உதடுகளை கொண்டு அவளது மேனியை துடைத்து, நாவு எனும் தூரிகையால் அவளுடலில் தன்னை எழுதினான் மூச்சுக்கு மூச்சு லட்டு என்று பிதற்றினான்.

அவளோ தேவாவின் ஒவ்வொரு அணுவிலும் குடியிருக்க பிரயத்தனப்பட்டு அவனோடு ஒன்றினாள்.

அவ்வளவு அழகானதொரு இணைவு அவர்களுக்குள் நிகழந்தது,அதை நினைத்து படுத்திருந்தவனுக்கு இப்போதே அவளுடன் ஒன்ற வேண்டும் என்ற வேகத்தில் எழுந்தவன் அது முடியாதே என்று எண்ணி கட்டிலில் தன் கையை வேகமாக குத்தினான்.

வீட்டின் நியாபகம் வரவும் ரொம்ப நாளைக்கு பின் வீட்டிற்கு அழைத்தான், ஹப்பா எல்லோரும் அவனிடம் பேசுவதற்கு லைனில் நின்றனர்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்க,மரியதாஸிற்கு அதைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது,ஆறு மாதம் கழித்துதான் கரைக்கு திரும்புவான்,அதுவரை எப்படி சமாளிக்கிறது என்று அவர் வேறு சிந்தனையில் இருந்தார்.

எல்லோரிடமும் பேசியவன் இறுதியாக "அண்ணே நித்யா" என்று பேச்சைத் தொடங்கினாள் ரீனா அதற்குள் தொடர்பை துண்டித்துவிட்டான்.

வேண்டா வெறுப்பாக வேலை செய்தவனுக்கு இப்போது அதுவே பழகிவிட்டது,கரைக்கு திரும்பியதும் மும்பையிலயே இருந்துவிட்டான்,நல்ல தூக்கத்தில் அவனருகில் நித்யா இருப்பது போல் தோன்றியது, அவள் அவனது அருகாமையை தேடுவது போல தோன்றியது.

எழுந்து அமர்ந்தவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது,வீட்டிற்கு போக வேண்டும் என்று யோசித்தவன் பின் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

இப்படியாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஊர் பக்கம் போகவே கூடாது என்று தன் பிடியில் நின்றிருந்தான்…

போன் பண்ணும் போது யாராவது நித்யா என்ற பெயரை சொன்னாலே போனை வைத்துவிடுவான்...அதன் பிறகு மாதக்கணக்கில் பேசமாட்டான்.அதற்கு பயந்தே யாரும் நித்யாவின் பேச்சை எடுப்பதில்லை.

தன் அம்மாவிடமோ இல்லை ரீனாவிடமோ அப்பா எப்படி இருக்காங்க என்று கேட்டுக் கொள்வான் அவ்வளவே.

எல்லவற்றிற்கும் காலமும் நேரமும் வரவேண்டும் போல,அருளை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தார்கள்,யாரோ அவரை துறைமுகத்தில் வைத்து அரிவாளால் அதிகாலை இருட்டில் வெட்டிப்போட்டு சென்று விட்டிருந்தனர்,

சகாயத்தின் ஏரியாவினர் ஏற்கனவே இங்க பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்,இரு ஏரியா மக்களுக்கும் பகையை மூட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வேறு ஒன்றுமில்லை தேவா ஊருக்கு செல்வதற்கு முந்தினநாள் இரவு வேகுநேரம் ராபினுக்காக காத்திருந்தான்,தன் அப்பாவை தள்ளிவிட்டவனுக்கு எதாவது பரிசு கொடுத்திட்டுப் போகணுமே என்றுதான் காத்திருந்தவன்,நல்ல பரிசாக கொடுத்துவிட்டுத்தான் போயிருந்தான்.

அந்த நேரத்தில் மகன் வெளியூருக்கு,செல்வதாலும்,அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்த தகவலாலும் மரியதாஸின் கவனம் இங்கில்லை .இரண்டுநாள் கழித்து தான் தெரியும் ராபினின் காலை தன் பைக் வைத்து ஏற்றி முற்றிலும் தேவா உடைத்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.ராபின் போதையில் இருந்ததால் என்ன நடந்ததென்று புரியாமல் போலீசில் கேஸும் பதிய முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் தெரிந்துதான் இருந்தது இது தேவாவின் வேலையென்று.யாருகிட்ட தேவாவிடம் இவனுங்களின் ஆட்டம் செல்லாது,மரியதாஸாவது இரக்கப்படுவார் தேவாவிடம் இந்த விசயத்தில் இரக்கம் என்பதே இருக்காது.

அதில் ராபினுக்கு காலின் மொத்தமும் டேமேஜாகி வலது கால்வைத்து சரியாக நடக்க முடியாது,அதுவே அவர்களுக்கு தேவாவின் மீதும் அவர்களது குடும்பத்தின் மீது வஞ்சத்தை கூட்டியிருந்தது...அதினால்தான் அருளை ஆள் வைத்து வெட்டி போட்டிருந்தனர்.எப்படியோ உயிர் பிழைத்துவிட்டார்

இதைக் கேள்விப்பட்டு ஒரே வாரத்தில் பதறியடித்து பிளைட் பிடித்து வந்திறங்கியவனுக்கு,மனசெல்லாம் ஒரு பரவசமாக இருந்தது.

ஏனென்று தெரியாமல் உள்மனம் தானாக ஆனந்தக் கூத்தாடியது,ஏனோதானோவென்று இருதயம் அடித்துக்கொண்டது.

நேராக ஹாஸ்பிட்டல் சென்றவன் சித்தப்பாவினை ஐ.சி.யூ வில் சென்று பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது,உடலெங்கும் வெட்டுக் காயத்துடன் இருந்தவரைப் பார்த்து மனம் அழுதது.

அவரைப் பார்த்துவிட்டு வேதனையோடு வீட்டினுள் நுழைந்தவன் பார்த்தது முன்னறையில் நின்றிருந்த நித்யாவைத்தான்.

பார்த்ததும் ஒரு நிமிடம் மனமெங்கும் மத்தாப்புவாக சந்தோஷ சாரல் விழுந்தது ...அடுத்த நொடியே அவளது செயலும் நியாபகத்திற்கு வரவும்,கண்கள் இரத்தமென சிவந்து அவளை கொல்லும் வெறியுடன்" நீ எங்கடி இங்க வந்த" என்று அவளை அடிக்க கையோங்கிய அவனைப் பார்த்து பயந்து கண்களை இறுக மூடியவளின், பின்னிருந்து எட்டிப்பார்த்த ஒரு உயிரான உருவத்தைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான் தேவா…

அத்தியாயம்-18

நித்யாவை பார்த்தவுடன் கொலை வெறியானவன், அவளை அடிக்க கையோங்கி அருகில் சென்றதும் அவளது சேலைக்கு பின்னாக ஒளிந்திருந்த சிறிய உருவம் எட்டிப் பார்த்து தன் பால் பற்களைகாட்டி கண்சிமிட்டி சிரிக்கவும் அப்படியே அதிர்ந்து நின்றான் தேவா.

சிறு தேவதையோ ஓடிசென்று அங்கு அமர்ந்திருந்த மரியாதாஸின் மடியில் அமர்ந்தவள் தாத்தா என்று அவரது நாடியைப் பிடித்து தேவாவை கைகாட்டி"அப்பா" என்றதுதான்.

எல்லோருமே அதிர்ந்தனர் மரியதாஸை தவிர: மற்ற எல்லோரும் என்னது" தேவா பொண்ணா"

என்றுதான் பார்த்தனர்.

தேவா அப்படியே பின் வாங்கி, இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவன்,தன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

ரெஜினா ஓடிவந்து என்னங்க இது மூணு வருஷமாகுது இப்போ இவளை ஒரு பிள்ளையோட கூட்டிட்டு வந்திருக்கீங்க,பிள்ளை வேற தேவாவ அப்பானு கூப்பிடுது,என்ன இது என்று பதறி பதட்டத்தில் கேட்கவும்.

"அவங்கப்பனை அப்பானு கூப்பிடுது இதுல எதுக்கு நீ பதறுற,நித்யா மேல நம்பிக்கையில்லையா இல்லை உன் மகன் மேல நம்பிக்கை இல்லையா" என்று காட்டமாக கேட்டார்.

ச்ச்ச..ச்ச அப்படி இல்லைங்க,நம்ம பிள்ளைங்க அப்படியில்லை.

ரீனா ஓடிவந்து அண்ணே பிள்ளையாப்பா இது? என்று தூக்கப்போக,ம்ஹூம் பிள்ளையோ அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு யாரிடமும் போகவில்லை.

அதைப்பார்த்த தேவாவிற்கு அந்த விசயத்தில் நித்யா மீது சந்தேகமில்லை,அவனது கோபமெல்லாம் அவனைவிட்டுச் சென்றாள்தானே...இப்போதுதான் பிள்ளையை நிமிர்ந்துப் பார்த்தவன்,பார்த்துக்கொண்டேயிருந்தான்.அவனது ஜெராக்ஸ் அவள்.

மெல்ல எழுந்தவன் தன் பாக்கெட்டில் இருந்த அவள் கழட்டி எறிந்த தாலியை எடுத்தவன் தன் கையை நீட்டி நித்யாவை நோக்கி காண்பித்து நான் கட்டிய தாலிய கழட்டி எறிஞ்சவளுக்கு, நான் கொடுத்த பிள்ளைய எதுக்கு வேண்டாம்னு அழிக்காம பெத்துக்கிட்ட, தாலியை கழட்டித் தந்தமாதிரி நான் தந்த பிள்ளையவும் இங்கவிட்டுட்டுப் போ என்றதும்...விக்கித்துப் போனவள் அப்படியே கண்ணீரோடு அவனைப் பார்த்திருக்க.

மரியதாஸோ "என்னல பேசுற,மருமக மனசை நோகடிக்குற மாதிரி இப்படி பேசுற,வார்த்தைகளால இப்படித்தான் காயப்படுத்துவியா? அவப்பக்கம் என்ன நியாயம் இருக்குன்னு நீ கேட்காமல் இப்படி வார்த்தைகளால் வதைக்காதே, அவளே பாவம் இவ்வளவு நாளா அனாதை மாதிரி என் பேத்தியும் மருமகளும் இருந்துட்டாங்க,நான் எவ்வளவு சொல்லியும் வரலை,இப்போ நீ வர்றனு சொல்லித்தான் அவளை வற்புறுத்தி இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் நீ என்னல இப்படி பேசுற"

"அப்பா மறந்துட்டீங்களா என் உயிரா நினச்சிருந்த இவதான் நான் வேண்டாம்னு என்ன பாதியில விட்டுட்டுப் போனாள்,அதனால் நான் எப்படி இருந்தேனு உங்களுக்கேத் தெரியுமே,அவகிட்ட சொல்லுங்க காதல் அப்படிங்கற பைத்தியம் இப்போ எனக்குத் தெளிஞ்சிடுச்சு இனி தேவா ஏமாற மாட்டான்"என்றவன் தன் மகளையும் திரும்பி பார்க்காமல் மாடிக்கு தனது அறைக்கு போனவன், அப்படியே ஜன்னலை திறந்து வைத்து அதில் தலைசாய்த்து எங்கோ வெறித்திருந்தான் கண்களெல்லாம் கலங்கி, மனதின் வலியை அப்படியே வெளியே தெரிந்தது…

உடனே ரீனா,ரெஜினா எல்லோரும் அவன் பின்னாக ஓடவும்,அங்கே நின்றிருந்த நித்யாவோ தன் கண்ணீரை உள்ளிழுத்து; அதை ஒரு பெருமூச்சில் அடக்கியவள்; அப்படியே சிறிது நேரம் நிற்கவும்,ரீனா ஓடி வந்து அப்பா அண்ணே அசையாம நிக்குறான் ஒன்னுமே பேசமாட்டுக்கான்.

அவன் கிட்டத்தட்ட இவ போனதுக்கு அப்புறம் எப்படி நடைபிணமா திரிஞ்சான்; இப்போதான் மனுஷனா மாறியிருக்கான்,இல்லைனா குடிச்சே அழிஞ்சிருப்பான்.

என்னவா இருந்தாலும் இவா ஏன் விட்டுட்டுப் போனா,என்ன நியாயமா இருந்தா என்ன; நம்ம போயிட்டம்னா நம்மளை நம்பிருக்க ஒரு இளிச்சவாயனும் அவன் குடும்பமும் என்னாகும்னு நினைக்காம தானப்பா போனா.இப்போ பிள்ளையோட வந்தா நம்ம ஏத்துக்கணுமாப்பா என்று அவளும் அழுதுகொண்டே கேட்க…

ரீனா வார்த்தைகளை அதிகமா பேசாத,அது பின்விளைவுகளை ரொம்ப ஏற்படுத்தும் உண்மை என்னன்னு தெரியாம பேசாத என்றவர் :மேலே மாடிக்கு தன் மகனிடம் செல்ல,அவரிடமிருந்து பிள்ளை நித்யாவிடம் தாவியது...அப்படியே தேவாவின் ஜாடை அவனின் நகல்தான் ரீனாவுக்குமே பிள்ளையை பார்த்ததும் மனமிளகியதுதான்.அதைவிட அண்ணன் முக்கியமல்லவா உடனே தன் அப்பாவின் பின்னாக ஓடினாள்.

அங்கு சென்றவர் ரெஜினா நீ போய் நித்யாகிட்ட பேசு,நான் இவன்கிட்ட பேசிட்டு வர்றேன் என்றவர் அம்மாவையும் மகளையும் கீழே அனுப்பியவர்: மெல்ல தேவாவென் அருகில் சென்றவர் அவனது தோளில் கைப்போட்டவர்" யோசிச்சு பாரு நீ வேண்டாம்னு போனவ,உன் பிள்ளயைவும் வேண்டாம்னு சொல்லி கலைச்சுட்டு; அவங்கப்பா காட்டிய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி சந்தோஷமான வாழ்க்கை வாழந்திருக்கலாமே!ஏன் அதை செய்யமா வயித்துல இருக்க உன் பிள்ளைய காப்பாத்த போராடணும்,மூணு வருஷமா நான்தான் அவங்களைப் பார்த்துக்குறேன்"

இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் அதுக்கு உரிமைபட்ட இரண்டு ஜீவன்களும் யாரும் இல்லாம தனியா திருநெல்வேலியில் இருக்கணும், பணத்துக்காக ஒட்டிக்கணும்னா எப்பவோ பிள்ளையோட இங்க வந்து ராஜாத்தி மாதிரி வாழ்ந்திருக்கலாமே!நல்ல யோசி" என்றவர்.

அறையைவிட்டு வெளியப் போகும்போது திரும்பி பார்த்து "சேர்ந்திருந்து வாழ்ந்து அன்பை காண்பிக்கறது ஒருவகைனா; நம்ம உயிரா நேசிக்கிறவங்களுக்கு எந்தவகையிலும் தன்னால ஆபத்து வந்துவிடக்கூடாது விலகிப் போறதும் அதீத அன்புதான்,முதல் வகை நீ இரண்டாவது வகை என் மருமக,அவ இந்த குடும்பத்துக்கு கிடைத்த முத்து தான் என்றவர் கீழிறங்கி, மருமகளையும் பேத்தியையும் தேட அவர்களை காணவில்லை.

ரீனாவிடம் கேட்க நானும் தேடிட்டுதான்பா வர்றேன் வெளியவும் காணும் என்றவளுக்கு அழுகையாக வந்தது.மறுபடியும் போயிட்டாளாப்பா கோபத்தில் இரண்டு வார்த்தை பேசிட்டா பொருத்துக்க மாட்டாளா என்று ரீனா சத்தமிட.

ரெஜினாவோ "ஐயோ வீடு தேடி வந்த பிள்ளையை காணலையே! ஐயோ!என்று ஓடி ஓடி தேட எங்கும் இல்லை இங்கு சத்தம்கேட்டு ஓடிவந்த தேவா"என்னாச்சு ஏன் சத்தம்போடுறீங்க" என்றவன் கண்களால் மனைவி பிள்ளை எங்கே என்று நோட்டமிட அவர்களின் நிழல்கூட அங்கில்லையே எப்படி கண்ணில் படுவார்கள்.

அவன் பார்ப்பதை அறிந்த ரீனா நித்யாவையும் பாப்பாவையும் காணோம் என்றதும் தான் தன் நெற்றில் அறைந்து கொண்டான் "முட்டாள் முட்டாள் மறுபடியுமா என்ன நிம்மதியாகவே வாழ விடமாட்டாளா? என்று அங்கலாயத்தவன் ஓடிப்போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு தேடியலைந்தான்.

நித்யாவோ தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் சீட்டில் சாய்திருந்தாள்,அவளது மடியில் பிள்ளை அழுத கலைப்பில் தூங்கிவிட்டது...ஆனால் நித்யாவின் கண்களிலோ வற்றாத நீருற்றுபோல கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மனதின் விரக்தி தைரியத்தை வரவழைத்தது, அதனால்தான் பிள்ளையை தோளில் போட்டவள் அங்கிருந்து நடந்தே வந்து கிடைத்த பஸ்ஸில் ஏறி வந்துவிட்டாள்.

யாரு என்னவேணா சொல்லிருக்கட்டும் தன்னை முழுதாக நம்ப வேண்டியவரே நம்பவில்லையே!பிள்ளையை கொடுத்துட்டு போக சொல்றாங்க,என்னை பிரிஞ்சு அவங்க மட்டுந்தான் கஷ்டப்பட்டாங்களா.என்னோட மனசு ரணமா இருக்கே அதுக்கு யாரு மருந்து போடுவது என்று யோசித்துக்கொண்டே வந்தவள் மகளின் பூ முகத்தை வருடிக் கொடுத்தாள்.

இனி நமக்கு உங்க தாத்தாகூட வேண்டாம்,எனக்கு நீ உனக்கு நான் நமக்கென ஒரு உலகம் போதும்,யாருக்கிட்டயும்போய் நம்ம வேண்டாதவங்களா ஒட்டிக்கிட்டு இருக்கவேண்டாம் செல்லம் என்று தீர்மானித்தவள் கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.

திருநெல்வேலி போய் சேர்ந்தவள் தன் வீட்டை அடைந்து:தனது படிப்பிற்கான சான்றிதழ் முதற்கொண்டு எல்லாம் எடுத்து வைத்தவள்; தன் பிள்ளைக்கு தேவையானதை எடுத்து வைத்தாள்,அப்படியே தன் பிள்ளையின் பக்கத்தில் படுத்தாள் அழுத கலைப்பும் மனதின் பாரமும், பிரயாணம் செய்ததும் சேர்த்து அவளை அறியாமலயே தூங்கிவிடவும்.

இரவு நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவளுக்கு பயங்கொடுத்தது.இந்த நேரத்துல யாரு என்று . அது மாமானார் வாங்கிக்கொடுத்த வீடுதான் சுற்றியிருப்பவர்கள் அவருக்கு தெரிந்தவர்கள்தான்,இதுவரை இப்படி இரவில் கதவை யாரும் தட்டினது இல்லையே என்று பயந்து கதவைத் திறக்காமல் இருக்கவும்.

மரியதாஸின் சத்தம் கேட்டது " பட்டு குட்டி தாத்தா வந்திருக்கேன் குட்டி அம்மாவை கதவை திறக்கச் சொல்லுங்க" என்று கேட்கவும்.

நித்யா கதவை திறப்பதற்குள் பிள்ளை சத்தம் கேட்டு எழுந்து தாத்தா தாத்தா என்று கத்த தொடங்கவும்...நித்யா கதவை திறக்க மாமனாரும் அவருக்குப் பின்னாக தேவாவும் நின்றிருக்க, தாத்தா என்று ஓடிப்போய் அவரிடம் தாவியது பிள்ளை.

அவர் உள்ள வரவும் தேவா எதுவும் பேசாது அங்கயே நின்று நித்யாவையே பார்த்திருந்தான்,அதை கண்டவள் எப்பவும் போல தன் இமைகளை தாழ்த்தி நிலம் பார்த்து நின்றாள்.

சுற்றி பார்த்தவர் நாங்க இப்போ வரலனா காலையில எங்கேயாவது போயிருப்பீங்க போல எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கீங்க.என்ன பட்டு குட்டி தாத்தாவ விட்டு போவதற்கு ரெடியாயிட்டீங்க போல என்று பார்வை தன் பேத்தியிடமும் வார்த்தைகள் மருமகளை சுடவும் பார்த்தார்.

"நாங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பல,நாங்க இங்க இருந்தா இனி சரிவராது" என குனிந்தே பதில் சொல்ல.

அதைக் காதில் வாங்காது "பேக் பண்ணினது அப்படியே இருக்கட்டும், நம்ம வீட்டுக்கு இப்போ போகலாம் உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ,பட்டு குட்டி நாம நம்ம வீட்டுக்கு போலாமா" என்று பேத்தியிடம் தலையாட்டிக் கேட்க, அவளும் தலையை வேகமாக ஆட்டினாள்.

நித்யா அசையாது நிற்க…"என்னம்மா பிரச்சனை".

இல்லை வேண்டாம் நாங்க இப்படியே இருந்திடுறோம் மாமா.நான் அந்த வீட்டை விட்டு வரும்போது தடுக்ககூட யாருமில்லை,அங்க எல்லாரும் என்னைதான் தப்பா நினைச்சு பேசலை;வா அப்படினுக்கூட கூப்பிடலை;ஆனா பட்டுகுட்டி என்ன தப்பு செய்தாள். அட்லீஸ்ட் அவளை தூக்கி கொஞ்சறதுக்கு எது தடையா இருந்துச்சு என்று கேட்டவள் தன் கண்ணை சுழட்டி தேவாவைப் பார்க்க.

சட்டென்று உள்ளே வந்தவன் அவளை நோக்கி கையோங்கியவன் நான் பிள்ளைய தூக்கலைனு குத்திக்காட்றியா...மனுஷியாடி நீ உன் இஷ்டத்துக்கு விட்டுட்டுப் போவ, இப்படி ஒருத்தி இல்லை செத்துப்போயிட்டானு மனசை தேத்தி உயிரோடவாவாது இருக்கலாம்னா; பிள்ளையோட வந்து நிக்குற மனசுக்கும் அதை ஏத்துக்க டைம் கொடுக்க வேண்டாமா,நீ வேணா உங்கப்பான் அந்த சொட்டைத் தலைக்கூட போ நன் என் பெண்ணை என்னோட கூட்டிட்டு போறேன்; நீ எங்கயாவது போய்டு என் கண்ணுல முழிக்காத என்று கத்தியவன் பிள்ளையை தன் தகப்பனிடமிருந்து தூக்கி கொண்டு காருக்குள் போய் அமர்ந்துக் கொண்டான்.

பட்டு குட்டி போட்ட அழுகையில் என்ன செய்யவென தெரியாமல் மறுபடியும் கொண்டுவந்து மரியதாஸிடம் கொடுத்துவிட்டு நித்யாவை முறைத்துக்கொண்டு நின்றான்.

போய் தேவையானதை எடுத்து வச்சிட்டு வாம்மா,என் காலத்துக்குள்ள நீங்க நல்லா வாழ்றதைப் பார்க்க வேண்டாமா...எனக்காக கொஞ்சம் சமாதானமாகுங்க என்றவர்,பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,தேவா அங்கிருந்த சேரில் அமைதியாக கண்மூடி அமர்ந்தவனுக்கு அவள் நடந்துபோறது தெரிந்தது...ஆனால் அவளது கொலுசொலியின் சத்தமில்லை.

கண்விழித்து பார்த்தவன் அவள் பிள்ளைக்கு உள்ளது மட்டும் எடுத்துக் கொண்டவள் வெளிய வர எத்தனிக்க.

பிள்ளை மட்டுமில்லைனா இதுக்குள்ள உன்னை பார்த்தவுடனே கொன்னு போட்டிருப்பேன்,இந்த வரைக்குமாவது என்னோட காதலையும் அன்பையும் மதிச்சியே!பிள்ளை விசயத்துலயாவது கொஞ்சமாவது உன் நெஞ்சில ஈரமிருந்துச்சே! அதுவரைக்கும் சந்தோஷம் என்று வார்த்தைகளால் அவளை உயிரோடு கொன்றான்.

பிள்ளைனு ஒன்னு இருக்கப்போய்தான் உயிர் அவளுக்காக உயிர் வாழணும்னு இருக்கேன் இல்லைனா இதுக்குள்ள நான் செத்து மூணு வருஷமாகிருக்கும்.

நீங்க என்னை பார்க்கறதுக்கோ கொல்றதுக்கோ வாய்பிருந்திருக்காது என்றவள் வெளியே சென்றுவிட்டாள்.

அதைக்கேட்டதும் தேவாவின் மனதில் யாரோ ஊசியால் குத்தியதுபோல வலியை உணர்ந்தான்,அவளைக் கொன்றுவேனு சொன்னவனுக்கு,இப்போது அவள் சொன்ன வார்த்தைகள் தான் வலியைக் கொடுத்தது

மெல்ல காரில் ஏறியவள் கண்மூடி அமர,பட்டுக்குட்டி மரியதாஸின் மடியில் இருந்தாள்,காரை தூத்துக்குடி நோக்கி ஓட்டினான் தேவா.

அத்தியாயம்-19

வீடு வந்து சேர்ந்ததும் மரியதாஸ் தன் மடியில் தூங்கிக்கொண்டிருந்த பேத்தி பட்டுக்குட்டி விழித்தாள் அழுவாளே! என்று மெதுவாக தன் தோளில் போட்டு வீட்டினுள் தூக்கி செல்ல,இங்கோ நித்யா அந்த ஒடுங்கிய இடத்தில் சரிந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

தன் கூட்டை அடைந்து விட்டோம் என்றதாலோ என்னவோ! தன்னவனுடன் இருக்கிறோம் என்ற மனநிம்மதியிலோ! தன்னை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.

காரிலிருந்து இறங்கிய தேவாவும் திரும்பி மனைவியை பார்க்க, அவளது முகம் தூக்கத்தில்கூட நிர்மலமாக இருந்தது. சிறிது நேரம் நின்று அவள் விழித்து இறங்குவாள் என்று பார்த்திருந்தவன்,கொஞ்ச நேரம் காத்திருந்தான்.

அவளோ அசந்து தூங்கிக் கொண்டிருக்கவும் மெல்ல கார் கதவை திறந்து அவளை பூச்செண்டு என தனது கைகளில் தூக்கிக் கொண்டவன்: வீட்டினுள் நுழையவும்,பட்டு குட்டியை தேவாவின் அறையில் கட்டிலில் படுக்க வைத்து விட்டு இறங்கி வந்து கொண்டிருந்த மரியதாஸ் அதைப் பார்த்தவர்,அவனுக்கு தெரியாமல் சட்டென்று தனதறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

இல்லையென்றால் 'தேவா எவ்வளவு வெறுப்பு இருந்தாலும் மனைவியை தூக்கிக்கொண்டு வருகிறானே' என்று நம்ம தப்பா நினைப்போமோ என அவன் எண்ணி விடக்கூடாதே என்றுதான் ஒளிந்து கொண்டார். 

இதுவே போதும்,அவன் மனதிலிருக்கும் காதல் இருவரையும் சந்தோஷமாக வாழ வைக்கும் என்று நம்பினார்.ரெஜினா என்னவென்று கை சைகையால் கேட்க,தேவா நித்யாவை தூக்கிக்கொண்டு மாடிப்படி ஏறுவது சுட்டிக்காட்டினார்.

அதைப் பார்த்து "எப்படியோ என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா சரி,இந்த மூணு வருஷமா குடும்பம் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்,இனியாவது நல்லா வாழட்டும்" என்று ரெஜினா தனது ஏக்கத்தை பெருமூச்சாக விட்டார்.

தேவா நித்யாவை தூக்கும் போதே அவள் அவனது நெஞ்சில் ஏதேச்சையாக சாய்ந்திருந்தாள்,அது தேவாவின் மனதை தன்னை அறியாமலேயே குளிர்வித்தது.

அவளது மேனியின் வாசம் அவனது நாசிக்குள் நுழைய,அவளது உடலின் மென்மையை கைகள் அறிந்தது.அவனது மனதின் கட்டுப்பாடும் கோபமும் நழுவுவது போல இருந்தது.

தனது மகளின் அருகில் மனைவியைப் படுக்க வைத்தவன்,பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து இரண்டு பேரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை தன்னை விட்டு விலகி சென்ற ஒரு உயிரான உறவு,தன் உயிரை சுமந்து பெற்று திரும்பி வந்திருக்கிறது, கை கால் முளைத்த பொம்மையாக கட்டிலில் படுத்திருந்த தன் மகளை பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீரும் கனிவும் ஒரு சேர வந்தது,மெல்ல தனது மகளின் காலைத் தொட்டு தடவிக்கொடுத்தான்,தனது வாழ்வில் வந்த இரு தேவதைகளையும் பார்த்து கொண்டிருந்தவன் எப்போ தூங்கினான் என்று தெரியாது.

காலையில் எழும்பியவன் மெல்ல தன் மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து;துறைமுகம் செல்வதற்காக வெள்ளை வேட்டி சட்டையில் கிளம்பி கம்பீரமாக கீழிறங்கியவன், தனது அறை கதவை சாத்தவும்,அந்த சத்தத்தில் நித்யா முழித்துவிட்டாள்.

மெல்ல எழுந்தவள் தனது அறையை சுற்றி நோட்டமிட்டாள், நம்ம கார்லதான் வந்தோம்;இங்க அதுவும் எப்படி கட்டிலுக்கு வந்தோம்;அதுவும் நம்ம ரூம்ல இருக்கோம் என யோசிக்கவும்;தேவா தான் தூக்கிட்டு வந்திருப்பாங்க என்று சரியாக கணித்தவளுக்கு லேசாக புன்னகை வரவும்,எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வந்தாள்.

அங்கே முன்னறையில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தேவாவைத்தான் அல்லி மலர் கண்களை விரித்துப் பார்த்தாள்.

அந்த நேரம் மரியதாஸும் துறைமுகம் செல்ல கிளம்பி வெளியே வரவும் தன் மகனைப் பார்த்து நீ எங்க கிளம்பியிருக்க?

இனி நான் கப்பலுக்கு வேலைக்குப் போகல, இங்க நம்ம தொழிலையே பார்த்துக்குறேன் என்றவனிடம் ஒன்றும் சொல்லாமல்.திரும்பி அங்கு அவனையே பார்த்திருக்கும் தன் மருமகளிடம் " ம்மா காபி போட்டு தர்றியா"என்று கேட்கவும் சுய உணர்வுக்கு வந்தவள் ஓடி சென்று காபி போட்டு எடுத்து வந்து தன் மாமனாருக்கு கொடுத்தவள் அப்படியே நிற்க,நிமிர்ந்து பார்த்தவர் தம்பிக்கும் குடும்மா என்றார்.

அவனருகில் சென்றவளின் கையிலிருந்த காபியை வாங்கியவன் குடிக்கவும்; அது தொண்டையில் இறங்க இறங்க பழைய ஞாபகங்களை கிளறியது உடனே பாதி காபியை அப்படியே வைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

மரியதாஸும் இதுக்குமேல அவங்களா சமாதானம் ஆனாதான் உண்டு என்று காரில் ஏறவும்,காரை எடுத்தவன் துறைமுகம் நோக்கி செல்ல…

இங்கோ அவன் வைத்த மீதி காபியை எடுத்தவள் குடிக்க உதட்டின் அருகே கொண்டுப்போனவளுக்கும்: இருவரும் சந்தோஷமாக கழித்த நாட்களின் நினைவுகள் அவளுக்கும் அடி மனதில் இருந்து பொங்கி வெளியே வரவும் அந்த கப்பை அப்படியே கொண்டு கிச்சனில் வைத்துவிட்டு தன் மகளோடு சென்று படுத்துக் கொண்டாள்.

அங்கு துறைமுகம் சென்று இறங்கியதும் எல்லோருடைய கண்ணும் தேவாவின் மீதுதான் இருந்தது அப்படியே மரியதாசன் இளமைக்கால உருவத்தில் இருந்தான்.

அதற்குள் அங்கு ஏலம்விட ஆரம்பிக்கவும் அதைக் கண்காணித்துக் கொண்டிருந்த தேவாவின் கண்களெல்லாம் கழுகுபோல சுற்றி சுற்றி வட்டமிட்டது.

அருள் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார் அதற்கு காரணமாக யார் இருந்தாலும் பிரித்து பந்தாட காத்திருந்தான்,அதற்காகத்தான் இன்று அவன் துறைமுகம் வந்ததே.

ஏலம் எடுப்பது அமைதியாக சென்று கொண்டிருக்க தனது மகனின் தொழில் நேர்த்தியும், அவனது கண்காணிப்பையும் பார்த்துக்கொண்டிருந்த மரியதாஸ் நினைத்தார் "இவனது தொழில் எண்ணமெல்லாம் இங்கதான் இருந்திருக்கு, இவன் எப்படி இனி கப்பல்ல போய் வேலை செய்வான். இவனது தொழில் சாம்ராஜ்யம் இந்த ஊரு தான்.அதுக்கான எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்று தனது மனதில் தீர்மானம் எடுத்துக் கொண்டார்.

மெல்ல தன்னோடு உதவிக்காக நின்றிருந்த மைக்கேலிடம்" சித்தப்பாவை சம்பவம் செய்த அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லு" என்று கேட்கவும்.

"தெரியலை ஆனா அன்னைக்கு எப்போதும் போல இல்லாமல் பென்னி பையன் இங்க நடமாடினான், காலையிலே நான் கூட கேட்டேன் என்னல புதுசா இந்த பக்கம்வந்து இருக்கனு, நீ போன இந்த மூணு வருஷத்துல கொஞ்சம் பணம் நடமாடுதலே அவன்கிட்ட"

"ஓஓஓ,அவன் இப்போ கடலுக்குள்ள தொழிலுக்கு ஒன்னு போறதில்ல போலிருக்கு கேள்விப்பட்டேன்"என தேவா கேட்கவும்.

அது ஒன்னும் இல்ல நம்ம ஆளு கடலுக்கு தொழிலுக்கு போனா. இவன் போர்ட்ல வேற ஏதோ கடத்துறான். நம்ம அண்ணன் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சு அதை பஞ்சாயத்து பேசி அவனை தொழில் பண்றதுக்கு தடை பண்ணிருந்தோம்,அப்புறம் மன்னிப்பு கேட்டு நம்ம சர்ச்ல சத்தியமெல்லாம் பண்ணி இப்போ உள்ள சேர்த்திருக்கு"

ஓஓஓ...அப்படியா இது எதுவும் எனக்குத் தெரியாதே என்று தேவா கேட்கவும்.

நம்ம பையலுவல சகாயம் அவன் பக்கம் சாய்க்குறான்,நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடக்குற நம்ம பையலுவல பணத்தால் விலைக்கு வாங்கப் பார்க்கிறான் ,அதுக்கு நம்ம அண்ணனுங்க இரண்டு பேரும் தடையா இருக்காங்க இல்ல அதனால தான் அவன் ஏதோ பண்ணி இருப்பானோனு சந்தேகமா இருக்கு"

சரிண்ணே என்கிட்ட இந்த விஷயம் சொன்னாதா அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று வேலையை பார்க்க ஆரம்பித்தான். எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பும் போது தான் பென்னியும் சகாயமும் ஒரே காரில் வரவும்,தேவாவிற்கு புரிந்து போனது,அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து வைத்தவன் அப்படியே ஹாஸ்பிட்டல் போய் அருளைப் பார்க்க,அவனைப் பார்த்ததும் அழுதுக் கொண்டிருந்த சித்தியை சமாதானம் செய்தவன் வீட்டிற்கு வந்தான்.

முன்னறையில் தன் அக்காள் இருவரின் குடும்பமும் வந்திருக்க எல்லோரும் முன்பாகவும்,அங்கு குட்டி மகாராணியாக தன் மகள் அமர்ந்திருக்க அவளை சுற்றி மொத்த குடும்பமும் இருந்தது,அதைக் கண்டவனுக்கு பிள்ளையை இத்தனை நாள் பிரிந்து இருந்த ஏக்கமும்,அதைவிட அவனுக்கு பிள்ளையென்று ஒன்று இருப்பதே தெரியாதே,நேற்றுதான் தெரியும். அதற்கான ஏக்கமெல்லாம் இப்போது கோபமாக தன் மனையாளின் மீதே திரும்பியது.அவளை கோபத்தில் முறைத்து பார்த்தவன் அப்படியே தனதறைக்குள் செல்ல, அவனையே பார்த்திருந்தவளின் ஏக்கமும் அவனுக்கு புரியவில்லை.

அவ்வளவுதான் மேலே சென்றவன் கோபத்தில் தன் கையை பீரோவில் காண்பிக்க .அதன் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்த சத்தம் கேட்டதும்; ரீனாவும் நித்யாவும் ஓடி வந்து பார்த்தது கையில் இரத்தம் வடிய நின்றிருந்த தேவாவைதான், இருவரும் ஓடி வந்து அவனது கையைப் பிடிக்க நித்யாவின் கையை உதறியவன் "விடுடி" என அவளது கையை தட்டிவிட்டான்.

நித்யா ரீனாவை பார்க்க அவளோ ஓடி சென்று மருந்து எல்லாம் எடுத்து வந்து: அவனது கைக்கு மருந்து போட்டவள் நித்யாவைப் பார்க்க அமைதியாக தேவாவின் கையைதான் கண்ணீரோடு பார்த்திருந்தாள்.

"என்ன இப்போ வந்து பாசமா இருக்குற மாதிரி நடிக்குற;நான் இருந்தா என்ன? செத்தா என்னனு போனவதான நீ;என் வாழ்க்கையை சிதைச்சுட்டு இப்போ வந்து நல்லவ வேஷம் போடுற;உன்னைப் பார்க்க பார்க்க ஆத்திரம் ஆத்திரமா வருது பதிணெட்டு வயசுல உடம்புதான் முக்கியமா இருந்தா, வேற எவனையாவது தேச்சுட்டு போகவேண்டியதுதான,என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு உன் உடம்பு ஆசை தீர்ந்ததும் போய்ட்ட...இப்போ வந்து என் கண் முன்னால் நிக்குற அதுவும் குழந்தையோட.

ஒரு தகப்பனா என் பிள்ளைய இரண்டரை வயசுல பாக்குறேன்; போடி என் கண் முன்னால இருந்து;உன்னை பார்க்கவே அருவருப்பாக இருக்கு என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,பளார் என்று அவனது செவுலில் ஒன்று விட்டிருந்தாள் நித்யா.

ரீனா தான் "ஹேய் அண்ணனை அடிச்சுட்ட" என்று கோபப்பட,அடிச்சு பல்லெல்லாம் கழட்டிருவேன் அண்ணன் தங்கச்சி இரண்டு பேரையும் என்று கோபத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து இருவரும் வாயைப் பிளந்து பார்த்தனர்.

என்ன மண்ணாங்கட்டி காதல் பண்ணின நீ,நீதான் உடம்பை மட்டும் நேசிச்சிருக்க,அதான் நான் போனதும் இப்படி என் மேல வெறுப்பை வளர்த்து வச்சிருக்க.

நீ என்னை காதலிச்சு புரிஞ்சுதான் கல்யாணம் செய்தியா என்ன? என்னை பிரிந்தது எதோ உனக்கு மட்டும் தான் வலியா? ஏன் எனக்கு வலி இல்லையா?

நம்ம மனைவி போனாளே!போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துப் போனேன்தான,என்னோட ஊரு அட்ரஸ் எல்லாம் தெரியுமே வந்து பார்த்திருக்கலாமே? 

நம்ம மனைவி நம்மள ரொம்ப லவ் பண்ணினாலே; அவ இப்படி செய்றானா எதாவது காரணமிருக்குமேனு யோசிச்சியா? இல்லை நமக்காக உயிரை கைல பிடிச்சுட்டு இருப்பாளேனு என்னை தேடி வந்தியா? என் மேல உங்களுக்கு எல்லாம் என்ன ஒரு நல்லெண்ணம்.

மாமா வரலைனா என் பிணம் ஆத்துலயோ! குளத்துலயே! இல்லை இரயில்வே தண்டவாளத்தில் கிடந்திருக்கும்,அப்புறம் எப்படி உனக்கு பிள்ளை வந்திருக்கும் என்று ஆவேசமாக பேசியவள் திரும்பி ரீனாவை பார்த்து "கூடவே இருந்தியே என்னைப் பத்தி உனக்கு என்ன ஒரு உயர்வான எண்ணம்"

உங்க லவ் கிடைச்சதுக்கும்,இவளோட நட்பு கிடைச்சதுக்கும் பெரியதா போன ஜென்மத்தில் எதோ பாவம் பண்ணிருக்கணும்போல என்று அழுதவள். 

அப்படியே வெறுங்கையால் அவ்வளவு கண்ணாடி துண்டுகளை படபடவென எடுத்து சுத்தம் பண்ணினவளின் கைகளிலும் கண்ணாடி கிழித்து இரத்தம் வர ரீனாதான் ஹேய் என்ன பண்ற இரத்தம் வருது என்று அவளது கையைப் பிடிக்க;விடுடி இங்க நெஞ்சிலயே இரத்தம் வருதாம், இது ஒன்னுதான் கவலையென்று அவளது கையைத் தட்டிவிட்டவள் தன் கையை கழுவிக்கொண்டிருந்தாள்.

தேவாவிற்கோ அவள் அடித்ததைவிட பேசிய வார்த்தைகள் தான் ரொம்ப வலித்தது.

 

தன் அண்ணனின் பார்வையை உணர்ந்த ரீனா வெளியே போக,இங்க நடந்தது எதையும் வெளிக்காட்டாது அமைதியாக எல்லோருடனும் சென்று அமர்ந்து கொண்டாள்.

மரியதாஸிற்கு புரிந்தது மகன் எதையோ போட்டு உடைத்திருக்கிறான் என்று ரீனாவிடம் கண்களால் கேட்க அவளோ ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

தேவா தன் மனையாளையே பார்த்துக் கொண்டிருக்க" மாமா சொன்னதைக் கேட்டு நான் இங்க வந்திருக்கவே

கூடாது தப்பு பண்ணிட்டேன்,நானும் என் பிள்ளையும் போறோம்,நீ ரொம்ப நல்லவளா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ,என்னை மாதிரி உடம்புக்கு அலையறவ உனக்கு வேண்டாம் என்று வெளியே போகப்போனவளை தனது இடது கையால் பிடித்து நிறுத்தியவன்" நீ செய்ததற்கு நான் இவ்வளவு பேசினதே குறைவுதான்,கோபம் வந்தா பேசத்தான்டி செய்வேன்,ஏன் பொருத்துக்கமாட்டியாடி"என சத்தம்போட.

அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் இதுக்கு மேல என்னதான் பொறுத்துக்கணும்,பேசுற வார்த்தைகளை பேசி மனசை குத்தி கிழிச்சிட்ட,போடா நீ எனக்கு வேண்டாம் உன் காதலும் வேண்டாம் என்று அவனது நெஞ்சில் அடித்துக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம்-20

 நித்யா தேவாவின் நெஞ்சில் அடிக்க அவளது கையிலிருந்து வந்த இரத்தம் அவனது வெள்ளைச் சட்டையில் முழுவதும் ஆகியது. இப்பொழுதுதான் பார்த்தான் அவனை விட அவளுக்கு தான் அதிகமாக உள்ளங்கை எல்லாம் கண்ணாடித் துண்டுகள் கிழித்திருந்தது.

அவளது கையைப் பிடித்து நிறுத்தியவன் இப்போது பார்த்தது நித்யா அப்படியே தன் கண்கள் மூடி மெல்ல மயங்கி சரிய, சட்டென்று பிடித்துக் கொண்டவன்: அவளது கன்னத்தில் தட்டி அவளை உணர்வுக்கு கொண்டு வர முயற்சி செய்ய அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்.

தேவாவோ "ரீனா" என்று கத்தவும்; பயந்து அவள் மேல ஓடிவந்தவள் பார்த்தது மயங்கி கட்டிலில் படுத்திருந்த நித்யாவைத்தான்"என்ன ஆச்சு ண்ணே"

"தெரியலைடா அழுததுல மயங்கிட்டா போல"

அவளும் அவளது கன்னத்தில் தட்டிப்பார்க்க அவள் எழும்பவில்லை என்றதும்,ஹஸ்பிட்டல் போயிருவோம் ண்ணே,நான் போய் மைக்கேலண்ணே இருந்தா கார் எடுக்க சொல்றேன், நீ தூக்கிட்டுவா" என்று ரீனா ஓடவும். பின்னாடியே நித்யாவை தூக்கிக் கொண்டு கீழே இறங்கினான்.

நித்யாவைப் பார்த்ததும் பட்டுகுட்டி ஆழ ஆரம்பித்தாள் அவளிடம் கையை நீட்டினாள் "ம்மா,ம்மா",மரியதாஸ்தான் மகனை முறைத்துப் பார்த்துவிட்டு, அவன் பின்னே பேத்தியை தூக்கிக்கொண்டு ஓடினார்.

மருத்துவமனையில் அவளை சேர்த்ததும்: கைக்காயத்திற்கு அவளுக்கும் தேவாவிற்குமாக மருந்திட்டு கட்டுப்போட்டு விட்டனர்.

அதற்குள் டாக்டர் நித்யாவை பரிசோதித்துவிட்டு "இரண்டு நாளுக்கு மேல சாப்பிடாம இருந்திருக்காங்க; அதுவும் இல்லாமல் மன அழுத்தம் சேர்த்து அவளை மயங்க வைத்தது அவ்வளவு தான் பிரச்சனை ஒன்னும் இல்ல.

இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் எழும்ப்பிடுவாங்க டிரிப்ஸ் போட்டிருக்கு".

இதையெல்லாம் விட பட்டுகுட்டி அழுகையைத்தான் சமாளிக்க முடியலை,நித்யாவின் அருகிலயே இருக்கவேண்டுமென்றாள்.

அருளினை வைத்திருக்கும் அதே ஹாஸ்பிட்டலுக்குத்தான் சென்றனர் அருளுக்கும்,அவரின் மனைவிக்கும் இதுவரை நித்யா வந்ததோ! இங்கு நடந்த பிரச்சினையோ! எதுவுமே தெரியாது.

அவருதான் ரீனாவை கண்டு என்னாச்சு பிள்ளை இங்க வந்திருக்க என்று கேட்கவும் தான் எல்லா விஷயத்தையும் சொன்னாள்.

அவருக்குப் பின்னர் சொல்லவா வேணும் தேவாவையே ரொம்ப பிடிக்கும். அவனுக்கு மகள் இருக்கு,அதுவும் நித்யாவும் இங்க வந்திருக்காள் என்றதும்,தன் கணவனிடம் ஐ.சி.யூவிற்குள் சென்று கூறியவள், உடனே தன் பேத்தியை பார்க்க ஓடி வந்துவிட்டார்.

அகதா அங்கு வந்ததும் அவர்களை நித்யாவையும்,பிள்ளையும் பார்க்க சொல்லிவிட்டு தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் மரியதாஸ்.

மெல்ல ஹாஸ்பிடல் முன்னாடி இருக்கும் கல் பெஞ்சில் அமர்ந்தவர் தன் மகனையும் அமர சொல்லியவர்" நித்யாவை காதலிச்சுதான கல்யாணம் பண்ணிக்கிட்ட. கல்யாணம் பண்ணிக்கும் போது அவ மேல இருந்த நம்பிக்கை இப்ப ஏன் இல்லை,உன்கிட்டயிருந்து இப்படியான செயலை நான் எதிர்பார்க்கலை, அவங்க வீட்ல உள்ள சூழ்நிலை தெரியும்; அவங்க அப்பா பத்தி உனக்கு நல்லாத் தெரியும் கொஞ்சமும் யோசிக்கலையா நீ.

இப்படிதான் என் பிள்ளைகளை வளர்த்து வச்சிருக்கானா? இதை நினைச்சாலே கஷ்டமா இருக்கு.

சரி அதையெல்லாம் விட, உங்கப்பா நான்தான் அவளை அழைச்சுட்டு வந்தேன், அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே நித்யாவ கூட்டிட்டு வந்து இருக்கனே, காரணம் இல்லாமல் இருக்காது என்று யோசிக்கவே இல்லையே.அவமேல தப்பிருந்தாலும்,அன்பும் காதலும் உனக்குள்ள இருந்தா மன்னிச்சு ஏத்துக்கும்,அதுதான் மனசு.

"ப்பா அவ நான் வேண்டாம்னு,தாலியை தூக்கி வெளியே ஏறிஞ்சுட்டா,அதைவிட போலிஸ் ஷ்டேஷன்ல உங்க முன்னாடிதான நான் வேண்டாம்னு எழுதிக்கொடுத்தாள்"எனக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்.

அவளுக்கு என்ன பிரச்சனை இருந்துச்சோ? அதை யோசிச்சியா,அவளை கட்டாயப்படுத்தியோ இல்லை பயமுறுத்தியோ செய்ய வச்சிருந்தாங்கனா?அப்படியொரு கோணத்துல யோசிச்சு பாரு என்று தன் மகனுக்கு பாடம் எடுத்தார்.

தேவா திரும்பித் தன் தந்தையின் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் "என்னப்பா சொல்றீங்க அப்படி ஒரு கோணத்தில் நான் யோசிக்கவே இல்லையே"

நானும் தான் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை.ஆனால் சின்னதா ஒரு சந்தேகம் இருந்தது. அது கப்பல் வேலைக்கு போகும்போது போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்த போன் அழைப்பு நித்யா பற்றிய தகவலுடன் தான் வந்தது.

என்ன எதுன்னு தெரியாமல் உன்னையவும் இருக்க சொல்லமுடியாது.அதுக்குப் பிறாகனது மருமகள் சொல்லவிடலை என்றவர் நித்யாவிற்கு நடந்த விசயங்களை சொல்ல ஆரம்பித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நித்யா கல்லூரியில் இருக்கும்போது பென்னி வந்தான், இப்போது சகாயத்துடன் இருக்கும் அந்த பையன்தான் கல்லூரிக்கு வந்தவன் நித்யா மற்றும் ரீனா சேர்ந்திருக்கும்போது "ஓடி வந்து ஏங்க உங்கம்மா பேரு ஜானகியா" என்றுகேட்கவும்,ரீனாதான் "ஏம்ல அவங்கம்மா பேரை நீ கேட்க" என்று கேட்கவும்.

ஏங்க வர்ற வழியில பெரிய ஆக்ஸிடண்டுங்க உங்கப்பாவும் அம்மாவும் போன வண்டி மேல லாரி ஏறிட்டுதுங்க. உங்க அப்பாக்கு லேசதாங்க அடி; ஆனா உங்க அம்மாவுக்கு ரொம்ப அடிங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க,பிளட் தேவைப்படுது. ஆனா அதைவிட உங்க அம்மா ரொம்ப சீரியஸா இருகாங்க,அதான் உங்ககிட்ட சொல்றதுக்காக வந்தேன். நீங்க தேவா மனைவி தான் எங்களுக்கு தெரியும் அதான் தகவல் சொல்லி அழைச்சுட்டுப்போக வந்திருக்கேன்.

அவ்வளவுதான் என்னதான் அம்மவீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாலும், அவர்கள் உயிருக்கு போராடிட்டிருக்காங்க என்றதும் அவளது கையெல்லாம் கிடுகிடுவென்று ஆடியது சும்மாவே மென்மையான சுபாவம்,இப்போது கேட்கவா வேண்டும்.

அழுதுகொண்டே வா ரீனா நம்ம போவோம் என்று அவளை அழைக்க."இரு பேக்கெல்லாம் எடுத்துட்டு வர்றேன் அதுலதான் செல்போன் இருக்கு அண்ணனுக்கும் தகவல் சொல்லிடுவோம் என்றவள், தனது வகுப்பிற்குள் போக,இங்க அழுதுகொண்டிருந்த நித்யாவிடம் ரீனா தேவாகூட வருவாங்க,நீங்க இப்போ வாங்க. நான் வந்த ஆட்டோலயே போயிடலாம் என்றதும் பதட்டத்தில் மூளை வேலை செய்யாமல் அவனுடனே சென்றாள்,அதற்கு முதல் காரணம் தேவாவிற்கு தெரிந்தவன் என்றதால்.

ஆனால் பாதி வழியில் ஆட்டோ நின்று அதில் ஏரியவனைப் பார்த்ததும் அப்பொழுதுதான் நித்யாவிற்கு நெஞ்சமெல்லாம் திக்கென்றிருந்தது.ஆம் அதில் ராபின் ஏறினான்.

அவ்வளவுதான் ராபின் ஏறியதும் பென்னி இறங்கிவிட்டான்,நித்யாவும் ஆட்டோவிலிருந்து வெளியே சாடுவதற்கு எத்தனிக்க,அவன் இறுக பிடித்துக் கொண்டான்.

ஆட்டோ நேராக சென்று நின்ற இடம் நித்யாவின் வீடுதான். அதைப் பார்த்ததும் நித்யாவிற்கு ஏதோ புரிவது போல இருக்கவும்" உங்க அப்பா தான் உன்னை கடத்திட்டு வரச் சொல்லி பணம் தந்தாரு; தேவாவை கொல்வதற்கு பணமும் பேசி இருக்காரு எங்ககிட்ட புரியுதா,மரியாதையா இறங்கி சத்தம் போடாம வரணும் இல்லை,

சங்கறுத்துருவேன்,உன்னோடதை இல்லை உன் புருஷன் தேவா சங்கை என்றதும் அமைதியாக வீட்டிற்குள் சென்றாள்.அவளைவிட்டுவிட்டு ராபின் சென்றுவிட்டான்

நித்யா உள்ளே செல்ல அங்கு சிவசு ஜானகி ,திவ்யா எல்லோரும் இருக்கவும் "எதுக்குப்பா என்னை இப்படி கடத்திட்டு வரச்சொல்லி அடியாளெல்லாம் செட் பண்ணி இருக்கீங்க பெத்த பிள்ளை யாராவது கடத்திட்டு வர சொல்வாங்களா? நீங்களும் ஒரு தகப்பனா?"

ஜானகியோ "என்னடி பேசுற அப்பாகிட்ட"

உங்களோட எந்த உறவும் வேண்டாம்னுதான் தேவாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ என்ன நான் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா என்ன,இப்படியொரு கேவலமான காரியத்தை செய்திருக்கீங்க"

சிவசு"பெத்து வளர்த்த தகப்பங்கிட்ட எப்படி பேசறா பாரு ஜானகி. உன்னோட இந்த கல்யாண விஷயம் இன்னும் நம்ம குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. உனக்கும் விசாகனுக்கும் கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு எங்க அக்கா தயாரா இருக்காள்.அங்க நம்ம போறோம் அதுக்குத்தான் உன்னை அழைச்சிட்டு வந்திருக்கு"

நீங்கெல்லோரும் லூசா என்ன?எனக்கு கல்யாணம் முடிஞ்சு,நான் என் ஆத்துக்காரர் கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன். இப்ப எப்படி விசாகனை கல்யாணம் பண்ணிக்க முடியும்.நான் போறன் எங்காத்துக்கு என்று கிளம்பியளை கையைப் பிடித்து நிறுத்திய சிவசு" என்னடி எங்காத்துக்குபோறேனு போற அதுக்காகவா இவ்வளவு பணம் செலவு பண்ணி உன்னை தூக்கிட்டு வந்திருக்கு.நீ மட்டும் சந்தோஷமா இருக்க, நாங்க அப்படி இல்லையே. பயந்து பயந்து உன் விஷயம் எப்போ வெளியே தெரியுமோனு பயந்து இருக்கேன்,அக்காங்களுக்கும் குடும்பத்துக்கு முன்னாடியும் தலை குனிந்து நிற்கணுமானு நான் இருக்கேன்,உன்னை அப்படியெல்லாம் விட முடியாது என்று கோபத்தில் பேசினார்.

நீங்க சந்தோஷமா மானம் மரியாதையோடு வாழனுங்கறதுக்காக, என்னோட சந்தோஷமான வாழ்க்கையை நான் எப்படிப்பா விட்டுட்டு வரமுடியும்?

இங்கப்பாரு நீ இப்போ போனனா அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன நடக்கும்னு சொல்லமாட்டேன் ஏற்கனவே தேவாவை கொல்றதற்கு சகாயத்துகிட்ட பணம் கொடுத்தாச்சு. அவங்களே அவனைக் கொல்றதுக்கு எப்போ எப்போனு காத்துட்டு இருக்காங்க. அதைவிட ரீனாவையும் சேர்த்துதான் தூக்க சொன்னோம்,ராபின் அவளைப் பார்த்துப்பான். அவங்கப்பாவையும் அண்ணனையும் அவளை வச்சு எப்படி பழி தீர்த்துக்கணும்னு அவங்களுக்கு தெரியும். ஏற்கனவ பத்து இலட்சம் கொடுத்திருக்கேன். உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போறதுக்கு இன்னும் எவ்வளவு வேணாலும் பணம் கொடுக்க நான் தயாரா இருக்கேன் என்று பழி தீர்க்கும் வெறியில் அவர் பேசினார்.

உங்களால ஒன்னும் செய்ய முடியாது என் மாமவும் தேவாவும் எல்லாத்தையும் பார்த்துப்பாங்க என்றவள் வெளியே இறங்கப்போக.

அதற்குள் ரீனா கல்லூரி முழுவதும் நித்யாவைத் தேடினாள்,நான் பேக் எடுத்துட்டு வர்றதுக்குள்ள போயிட்டாளோ என்று சந்தேகத்துடனே தனது அண்ணனுக்கு அழைத்து விவரத்தை சொன்னாள்.

தேவாவோ எந்த ஹாஸ்பிட்டல் சொன்னாங்க கேட்க...ரீனாவிற்கு பதில் தெரியவில்லை.

என்ன ரீனாகுட்டி அவதான் பதட்டத்துல இருந்திருப்பா நீயாவது எல்லாத்தையும் விசாரித்திருக்க வேண்டாமா என்ற வருத்தப்பட்டவன்...அவங்க வீட்டு பக்கம் யார்கிட்டயாவது விசாரித்துப் பார்ப்போமே என்று அவளது வீட்டிற்கு சென்று அருகில் விசாரிக்க அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்ற தகவல் வந்தது.

உடனே அவர்கள் வீட்டு கதவைத் தட்ட அது உட்பக்கமாக பூட்டியிருக்கவும், அவனுக்கு சந்தேகம் வலுப்பெற்றது,கதவை படபடவென்று தட்டினான்" நித்யா...நித்யா"என்று.

உடனே தாவி ஓடிப்போன நித்யாவை பிடித்து தடுத்து நிறுத்தியவர்,வீட்டினுள் இழுத்து சென்று ஒரு கேன் எடுத்து அதில் வைத்திருந்த பெட்ரோலை தன் தலையிலும் மனைவி,திவ்யாவின் தலையிலும் ஊற்றியவர் சமயலறைக்குள் சென்று தீப்பெட்டியை எடுத்து வந்து,அவன்கூட போனனா உன் கண்முன்னாடியே இப்பவே கொழுத்திட்டு செத்துப்போயிடுவோம் என்றதும்…

ஓடிசென்று அவரது காலைப்பிடித்து "ப்பா ப்ளீஸ்ப்பா என்னை வாழவிடுங்கப்பா. தேவா ரொம்ப நல்லவருப்பா,அவங்க குடும்பத்துல எல்லோரும் என்மேல ரொம்ப உயிரா இருக்காங்க,என்னை அவங்கவீட்டு பொண்ணா பார்த்துக்குறாங்கப்பா,நான் அங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தேவாவுக்கு நான்தான்பா உயிரு எனக்கும்,எங்களை தயவு செய்து வாழ விடுங்கப்பா என்று கதறியும் சிவசுவின் மனது இளகமால்.

என்னதான் இருந்தாலும் அவங்க நம்ம சமுதாயமில்லையே.நாளைக்கு எப்படி நம்மளவா முகத்துல முழிப்பேன்,அதுக்கு நாங்க இப்பவே செத்துப்போயிடுறோம் என்று தீப்பெட்டியை எடுத்து பற்றவைக்கப்போகவும்,

ஓடிப்போய் தட்டிவிட்டவள் :வேண்டாம்பா நான் நீங்க சொல்றமாதிரியே கேட்குறேன் கொழுத்திக்காதிங்கப்பா என்று தரையில் மண்டிப்போட்டு அழுதாள்.

அதற்குள் தேவா கதவை உடைக்கின்றளவுக்கு தட்டவும்: சிவசு நித்யாவிடம் நாங்க கொழுத்திக்கறது மட்டுமில்லை நீ அவன்கூட போனனு வை அவனைக் கொல்றதுக்கு பணம் கொடுத்திருக்கேன். அவனை கொன்னுட்டு உன்னை விதவையா கூட கும்பகோணம் கூட்டிட்டுப்போவேன்,அவன் உயிரோடு இருக்கறது உன் கையிலதான் இருக்கு,அப்புறம் அவன் தங்கச்சி உன் பிரண்ட் அவளை சீரழிக்க வச்சிடுவேன் பார்த்துக்க.

கதவைதிறந்து அவன்கூட வாழ விருப்பமில்லாம தான் இங்க வந்துட்டேனு சொல்லு போ,தீப்பெட்டி இன்னும் என் கையிலதான் இருக்கு பார்த்துக்கோ என்று எச்சரித்து மிரட்டியே அனுப்பினார் நித்யாவை.அதற்குள் தெருவில் கூட்டம் கூடியிருந்தது

மெல்ல கதவை திறந்தவளைப் பார்த்த தேவா "என்ன லட்டு இங்க இருக்க,உங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆக்ஸிடெண்டுனு சொல்லிட்டு இங்கயிருக்க,என்னம்மா என்று அவளருகில் வரவும்"அவனைத் தள்ளிவிட்டவள்

"உங்ககூட வாழ விருப்பமில்லை,உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது அதனால் எங்கப்பா வீட்டிற்கே திரும்ப வந்துட்டேன்,தயவு செய்து இங்கயிருந்து போங்க"என்றாள்

அதைக்கேட்டதும் முதலில் ஒன்றும் புரியாது விழித்தவன் " என்னடி பேசுற நீ.எதுவாயிருந்தாலும் வா நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று அவளது கையை பிடித்து இழுக்கவும், அவனது கையை தட்டி விட்டவள் உங்களுக்கு கேக்கலையா நான் என்ன சொன்னேன்னு, உங்க கூட வாழ எனக்கு பிடிக்கல பிடிக்கல பிடிக்கல என்று சத்தம்போட்டு கத்தவும்,தேவா அதிர்ந்து நின்றான்.

அதற்குள் சிவசு வந்து" அதுதான் என் பொண்ணு உன்கூட வாழபிடிக்காமல் வந்துட்டாளே,பின்ன இங்கவந்து எதுக்கு சத்தம் போடுற,நான் போலீஸுக்கு போன் பண்ணுவேன். இங்கயிருந்து போங்க என்றவர் தன் மகளின் கைகயைப் பிடித்து உள்ளே இழுத்து கதவை சாத்தினார்.

தேவா மறுபடியும் கதவை தட்டிக்கொண்டிருந்தான்,நித்யா வந்துட்டி, எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்,லட்டு வந்துட்டி என்கூட என்று கதவை உடைக்கின்ற மாதிரி இடிக்கவும்,சிவசு நித்யாவின் கழுத்திலிருந்த தாலியை கழட்டி இந்தா என் பொண்ணு உன்கூட வாழ விருப்பமில்லாம தாலியை கழட்டித் தந்துட்டா என்று ஜன்னல் வழியாக வீசினார், ஓடிவந்து அதே நேரத்தில் ஜன்னல் வழியாக நித்யா எட்டிப் பார்க்க,தேவாவிற்கு உண்மையிலயே நித்யாதான் தாலியை கழட்டி வீசியது போல இருந்தது.

அந்த தாலியைக் கையிலெடுத்தவன் மீண்டும் கதவை தட்டி நீயெல்லாம ஒரு மனுஷியாடி. மூணுமாசம் வேஷம் போட்டு என்கூட வாழ்ந்தியாடி என்று சண்டைப்போட்டு கதவை உடைக்க சிவசு இனிவிட்டா நித்யாவை நம்மகூட பிடிச்சு வைக்க முடியாது என்று போலீஸுக்கு அழைத்து தேவாவின் மீது புகார் செய்தார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனை போலீஸ்வந்து தங்களது வண்டியில் பிடித்து இழுத்து சென்றனர்.